Menu

அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்

மூலவர் : கபாலீசுவரர்

அம்மன்/தாயார் : கற்பகாம்பாள்

 

இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.

 

ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.

 

பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.

இத்தலம் வாயிலார் நாயனார் அவதாரத் தலம்

 

இருப்பிடம் : சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது. மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு.

போன் : +91- 44 – 2464 1670.

பிரார்த்தனை :

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் …

 

சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் …

 

திருமயிலைத் தலபுராணம்

 

’திருமயிலைத் தலபுராணம்’ எனும் நூல் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீஅமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றியது.

 

120 முன்பு பதிப்பிக்கப்பட்டு பின்னர் மறைந்திருந்த இந்நூலை ’சிவாலயம்’ அமைப்பின் நிர்வாகி ஜி.மோகன் இரண்டாம் பதிப்பாக 2012 ஆம் ஆண்டு கொணர்ந்தார். இந்நூல் பல அரிய தகவல்களை உள்ளடக்கியது.

 

சென்னை ஸ்பென்சர் பிளாசா

சென்னைக்கு பழசு, புதுசு என நிறைய...

Leave a Reply